ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என மூன்று படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்த படத்திலும் நடிகையர் திலகம் படத்தில் நடித்தது போலவே நிருபர் வேடத்தில்தான் நடிக்கிறார். என்றாலும், இது அதைவிட அழுத்தமான வேடம். அதோடு தான் கதையின் நாயகி என்பதால், கூடுதல் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
மேலும், பத்திரிகையாளரின் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்திலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கன்னட யுடர்ன் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.