சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹூமா குரேஷி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காலா'. இப்படத்திற்கு ஹிந்தியில் 'காலா கரிகாலன்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் முதல் போஸ்டரை பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவகன் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். பிரபல படத் தயாரிப்பு நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் இப்படத்தை வட இந்தியா முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் ஏற்கெனவே ஹிந்தி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். மேலும் படத்தில் ஹிந்தித் திரையுலகத்தைச் சேர்ந்த நானா படேகர், ஹூமா குரேஷி உள்ளிட்டவர்கள் நடித்திருப்பதாலும், படம் மும்பை தாராவியில் நடக்கும் கதை என்பதாலும் ஹிந்தி ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழில் வெளிவரும் அதே ஜுன் 7ம் தேதியன்று படம் ஹிந்தியில் வெளியாகும். ஆனால், ரஜினிக்கு பெரிய மார்க்கெட் உள்ள தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் சம்பந்தமான எந்த ஒரு அறிமுக விழாவும் நடக்காமல் இருப்பது தெலுங்கு ரஜினி ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.