பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேய்ஸ் புகழ் இயக்குனர் அஞ்சலி மேனனுக்கு அந்தப்புகழை வைத்து உடனே வியாபாரம் செய்து சம்பாதிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. அதனாலேயே அந்தப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பின்னும் தனது அடுத்த படத்தை கொடுக்க நான்கு வருட இடைவெளி எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் புதிய படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் பார்வதி, நஸ்ரியா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். நஸ்ரியா பிருத்விராஜூக்கு தங்கையாக நடித்திருக்கிறார். திருமணத்திற்குப்பின் நஸ்ரியா மீண்டும் நடிக்கும் படம் என்பதால் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்தப்படம். ஏற்கனவே பிருத்விராஜின் ஜோடியாக என்னு நிண்டே மொய்தீன், மை ஸ்டோரி என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பார்வதி, இதிலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தவிர, பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் ஜூலை-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அஞ்சலி மேனனின் முந்தைய படமான பெங்களூர் டேய்ஸ் கடந்த 2014 மே-3௦ல் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.