ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணத்திற்குப்பின் மீண்டும் நடிக்க வந்த நடிகைகளில் நடிகை கனிகாவுக்கு தமிழில் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் ஓரளவு வாய்ப்புகள் வரவே செய்கின்றன. தற்போது மம்முட்டியுடன் தமிழில் பேரன்பு, மலையாளத்தில் ஆப்ரஹாமின்டே சந்ததிகள் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் கனிகா. இவை அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.
இதை தொடர்ந்து ரஞ்சித் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கனிகா. ஏற்கனவே கிறிஸ்டியன் பிரதர்ஸ், ஸ்பிரிட் ஆகிய படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள கனிகா, 6 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தகவலை கனிகாவும் உறுதி செய்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார்கள்.