இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா பிரபலமான முன்னாள் நடிகை. தமிழில் நெற்றிக்கண் உள்பட சில படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாதவர். 80 வயதாகும் சரோஜா பேத்தி கீர்த்தி சுரேசுக்கு ஜோடியாக படப்பிடிப்புகளுக்கு செல்வது வழக்கம்.
ரெமோ படத்தின் படப்பிடிப்புக்கு சென்றபோது சிவகார்த்திகேயன் சரோஜா பாட்டியை ஒரே ஒரு காட்சியில் நடிக்க வைத்தார். அப்போதிலிருந்து சரோஜா பாட்டிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தாதா 87 என்ற படம் தயாரிப்புக்கு வந்தது.
இந்தப் படத்தில் சாருஹாசன் தான் ஹீரோ, அவர் தாதாவாக வருகிறார். அவருக்கு 87 வயதாகிறது. அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேடியபோது சரோஜா பாட்டி நினைவுக்கு வர அவரையே நடிக்க வைத்து விட்டனர். 80 வயது சரோஜா, சாருஹாசன் மனைவியாக நடித்துள்ளார்.
இதுதவிர, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டிசிங்கம் படத்தில் கார்த்தியின் பாட்டியாகவும் நடிக்கிறார் சரோஜா. தொடர்ந்து பாட்டி வேடத்தில் நடிக்க சரோஜாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. இதனால், 80 வயதில் சினிமாவில் பிசியாகியிருக்கிறார் சரோஜா பாட்டி.