டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு படத்திற்குப் பெயர் வைக்கும் போதே வேண்டுமென்றே அதே பெயருடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்த்து ஏட்டிக்குப் போட்டியாக பெயர் வைப்பார்கள் போலிருக்கிறது. இதில் யார் முதலில் பெயர் வைத்தார்கள் என்று பஞ்சாயத்து செய்தால் கூட தீர்வு வராது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'காளி' படத்தின் தலைப்புக்கு ஏட்டிக்குப் போட்டியாக 'கெட்ட பய சார் இந்த காளி' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வெளியாக உள்ளது. அது போலவே 'செம' என்ற படத்தின் தலைப்புக்கு ஏட்டிக்குப் போட்டியாக 'செம போத ஆகாத' என்றொரு படமும் தயாராகியுள்ளது.
இதில் 'செம போத ஆகாத' படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளது. 'செம' படம் 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படி ஒரே சமயத்தில் அடுத்தடுத்து பெயர்க் குழப்பம் ஏற்படுத்தும்படியான படங்கள் வருவது இரண்டு படங்களுக்குமே நல்லதல்ல. ஒரு படம் ஓடி முடிந்த பின் அடுத்த படத்தை வெளியிடலாம்.
'செம போத ஆகாத' படத்தில் அதர்வா மிஷ்டி, அனைகா சோதியும், 'செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.