தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் பாண்டிராஜிடம் அசோசியேட்டாகப் பணியாற்றிய நவீன் 'மூடர் கூடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். டார்க் காமெடிப் படமாக எடுக்கப்பட்ட மூடர்கூடம் படம், ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.
குறிப்பாக, மூடர்கூடம் படத்தின் வசனங்கள் இன்றும் பேசப்படுகின்றன. மூடர்கூடம் படத்தில் பிரதான வேடத்தில் நடித்த நவீன் அப்படத்தின் கதாநாயகியையே காதலித்து மணந்தார்.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் சத்தமில்லாமல் இயக்கி முடித்துள்ளார் நவீன். அப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில், அவரே ஹீரோவாக நடித்துள்ளார்.
நவீனுக்கு ஜோடியாக 'கயல்' பட அறிமுகநாயகியான ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாக்கெட் அடிப்பவராக நடித்திருக்கிறார் ஆனந்தி.
விரைவில் இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட இருக்கிறார் நவீன். இதற்கிடையில், விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். இந்தப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.