இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்துள்ள 'தியா' படத்தின் கதை 'தி அன்பார்ன் சைல்ட்' என்ற தாய்லாந்து படத்திலிருந்து சுடப்பட்ட கதை என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டுமல்ல 'தி அன்பார்ன்' என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் ஏறக்குறைய இது போன்றதொரு கதை கொண்ட படம்தான்.
கருவிலேயே அழிக்கப்படும் குழந்தை, தான் அழிவதற்குக் காரணமானவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் அந்த இரண்டு படங்களின் கதை. அந்தப் படங்களின் கதையைத் தழுவி, தமிழுக்கு ஏற்றபடி ஒரு கதை எழுதி அப்படியே 'தியா'வாக எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.இணைய வளர்ச்சியில் எந்த ஒரு படமும் எந்த மொழியிலிருந்து காப்பியடிக்கப்படுகிறது என்பதை சாதாரண ரசிகர்கள் கூட கண்டுபிடித்துச் சொல்லும் இந்தக் காலத்தில் இப்படி தாய்லாந்து மொழிப் படங்களைக் கூட விட்டு வைக்காமல் காப்பியடித்து படம் எடுப்பதை எதில் சேர்த்துக் கொள்வது ?.
காப்பியடிக்கிறார் என்று தெரிந்தும், அப்படிப்பட்ட படங்கள் ஓடவில்லை என்று தெரிந்தும் இது போன்ற இயக்குனர்களுக்கு எப்படி தொடர்ந்து படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்று கோடம்பாக்கத்தில் உள்ள பல உதவி இயக்குனர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.