பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஹாலிவுட்டில் இந்த ஆண்டின் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் நாளை மறுநாள் ஏப்ரல் 27ம் தேதி இந்தியாவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீடு பல நேரடி தமிழ்ப் படங்களை அலற வைத்துள்ளது. படம் வெளியாகும் நாளிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை 'அவெஞ்சர்ஸ்' படம் அடியோடு அழித்துவிட்டது. மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் படங்கள் வரும் போது அதைக் குடும்பத்துடன் சென்று பார்க்க அவர்கள் தயங்குவதில்லை என்பதை இப்படத்திற்கான முன்பதிவு நிலவரம் புரிய வைத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சுமார் 60க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் இப்படம் தமிழ்நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. ஹாலிவுட் படங்கள் தமிழ் பேச ஆரம்பித்த பின் அந்தப் படங்களுக்கான மார்க்கெட் தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்துவிட்டது.
இந்த வாரம் வெளியாகும் தமிழ்ப் படங்களுக்கு 'அவெஞ்சர்ஸ்' படம் கடும் சவாலைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.
நல்ல வேளை 'காலா' படம் முன்னர் அறிவித்தபடி இந்த வாரம் வெளியாகவில்லை. வந்திருந்தால் 'அவெஞ்சர்ஸ்' அலையில் 'காலா' கூட சற்று தள்ளாடி போயிருக்கும்.