இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
துப்பறிவாளன் படத்தையடுத்து விஷால் நடித்து, ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் இரும்புத்திரை. விஷால் ஜோடியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கி உள்ளார். விஷாலே தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போனது. இடையில் ஸ்டிரைக் வேறு நடந்தது. தற்போது ஸ்டிரைக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீடும், மே 11-ல் படமும் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இதை விஷால் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டரில், இரும்புத்திரை படம் மே 11-ல் ரிலீஸாகாது. படத்தை வாங்கியவர்கள், விஷால் பிலிம் பேக்டரியின் அறிவுரை இன்றி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ரிலீஸ் குழுவின் ஒப்புதல் படி ரிலீஸ் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.