ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்றைய இளைஞர் சமுதாயத்தை மொபைல் ஆப்கள் தான் ஆட்டிப்படைக்கின்றன என்றே சொல்லலாம். அந்த ஆப்கள் தற்போது நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. ஆம், மலையாள நடிகர் நிவின்பாலிக்கு என தனியாக அவரது பெயரிலேயே ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்..
நிவின்பாலியின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த 'ஆப்'பை உருவாக்கியுள்ளார். இந்த ஆப் மூலம் நிவின்பாலி நடிக்கும் படங்கள், நடித்த படங்களின் காட்சிகள், பாடல்கள், நிவின்பாலி பற்றிய தகவல்கள் என அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியுமாம்.