ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் கடந்த ஆண்டில் வெளிவந்த சி 3. தெலுங்குப் படம் கட்டமராயுடு. அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு, கிடப்பில் உள்ளது.
கையில் படங்களே இல்லாமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார். பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்த வித்யூத் ஜம்வால் ஜோடியாக ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி. இவர்களுடன் நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் உள்ளிட்டவர்களுடன் நடிக்கிறார்கள்.
மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குகிறார். கலானி என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு இன்று(ஏப்., 20) துவங்கியது.
காதல் உடன் கூடிய ஆக்சன் படமாக இந்தப்படம் உருவாகிறது.