ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இந்த படத்தை ஏப்ரல் 27-ந்தேதி வெளியிடயிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் திரையுலகில் ஏற்பட்ட ஸ்டிரைக் காரணமாக அதற்கு முன்பே ரிலீசாக வேண்டிய படங்களும் தேங்கிப்போயின.
இருப்பினும், காலா திட்டமிட்டபடி ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதற்காக அந்த படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது தமிழ்த்திரையுலகின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு படங்களின் வெளியீடு சென்சார் சான்றிதழ் பெற்ற தேதியில் இருந்து முறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காலா ரிலீஸ் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், காலா ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள். வேலை நிறுத்தத்தை புரிந்து கொண்டு எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக காலா படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லைகா நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.