ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனை புரிந்த படமாக கடந்த வருடம் வெளியான 'பாகுபலி 2' படம் அமைந்தது. நேரடி ஹிந்திப் படங்களின் வசூலையும் முறியடித்து டப்பிங் படமான இந்தப் படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது.
தென்னிந்திய அளவில் ரஜினிகாந்த் படங்கள் தான் இதுவரை வசூலில் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அவற்றையும் முறிடியத்த பெருமை 'பாகுபலி 2' படத்திற்கு உண்டு. 1700 கோடி வரை வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ம் தேதி வெளியானது.
ஜப்பான் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த 'பாகுபலி 2' படம் கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் 100வது நாளை அங்கு கடந்துள்ளது. அங்கு இந்தப் படம் 13 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. படத்திற்கு பெரிய அளவில் வசூல் இல்லை என்றாலும் அங்குள்ள பெரும்பாலான ரசிகர்கள் 'பாகுபலி 2'வின் ரசிகர்களாக மாறியிருப்பதுதான் ஆச்சரியமானது என்கிறார்கள். அடுத்து இப்படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.