தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி. இதில் கவுதம் கார்த்திக், அவரது தந்தை கார்த்திக், ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடைசியாக தாய்லாந்தில் நடந்தது. வேலை நிறுத்தத்திற்கு முன்பே படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி விட்டனர். அங்கு கவுதம் கார்த்தி, ரெஜினா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் ரெஜினா படு கவர்ச்சியாகவும், கவுதமுடன் மிக நெருக்கமாகவும் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இப்போது அதன் படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளனர். ரெஜினா தெலுங்கு படங்களில் தான் கவர்ச்சியாக நடிக்கிறார்.
தமிழில் அப்படி நடிப்பதில்லை என்ற கருத்து இருந்தது. அதை உடைக்கும் வகையில் மிஸ்டர்.சந்திரமவுலியில் தாராளமாக நடித்திருக்கிறார்.