ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ், இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியான பிறகு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் என்னவாயிற்று? என்ற கேள்வி படத்துறையில் எழுந்திருக்கிறது.
கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ரஜினி நடிக்கும் படத்தைத் தான் இயக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தை முடித்த பிறகே தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் கார்த்திக் சுப்பராஜ் தரப்பில் சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிக்கும் படத்தை தள்ளி வைக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த படத்தில் முக்கிய வேடங்களில் சில ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க கார்த்திக் சுப்பராஜ் முயற்சி செய்து வருகிறார்.
அவருடைய முயற்சி கைகூடும் நேரத்தில் அந்தப்படத்தை தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் பின்வாங்கிவிட்டது. தனுஷையே தயாரிக்கும்படி கேட்டார் கார்த்திக் சுப்பாராஜ். அவரோ வட சென்னை படத்தை தயாரிப்பதால் அவரிடமிருந்து கார்த்திக்கு இன்னும் பாசிட்டிவான பதில் வரவில்லை.
இதனால் தான் ரஜினி நடிக்கும் படத்தை முதலில் இயக்கிவிட்டு, பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.