ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலா இயக்கிய படம் நாச்சியார். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்தார். பி ஸ்டூடியோ சார்பில் பாலாவே தயாரித்திருந்தார். பாலியல் பலாத்தகாரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் நீதிக்காக போராடும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் கதை.
கடந்த பிப்ரவரி 16ந் தேதி வெளியான இப்படம், இருவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டு சுமாரான படங்களின் பட்டியலில் இருந்தது. என்றாலும் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
நாச்சியார் வெளிவந்த இரண்டாவது வாரத்திலிருந்து சினிமா ஸ்டிரைக் தொடங்கியது. அதன் பிறகு புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் நாச்சியாருக்கு அடித்தது யோகம். வேறு படங்கள் இல்லாததால் தியேட்டர்காரர்கள் நாச்சியாரை தொடர்ந்து திரையிட்டனர். இதன் காரணமாக இன்று 50வது நாள் வரை தியேட்டரில் தங்கிவிட்டார் நாச்சியார். சென்னையில் மட்டும் முக்கியமான மால் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளாக 50வது நாளை எட்டிப்பிடித்திருக்கிறார் நாச்சியார்.