‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கில் நடித்த பிடா படமும் பெரிய ஓப்பனிங்கை கொடுத்தது. அதே தமிழில் அவர் நடித்துள்ள கரு படமும் நல்லதொரு ஓப்பனிங்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரு படத்தில் நடித்து வந்தபோதே சூர்யா, தனுசுக்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான சாய் பல்லவி, அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அவர் நடிப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கில் சில படங்களில் கமிட்டாகி உள்ளதால் சிவகார்த்திகேயன் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் நிலவுகிறதாம். அதனால் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள். ஆகையால் அவருக்கு பதிலாக நயன்தாராவிடம் பேசி வருகின்றனர்.