மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். இவர்கள் நடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு ரெடியாகிவிட்டன. ஆனால் திரையுலக ஸ்டிரைக் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது.
ரஜினியின் காலா படம் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம், காலாவிற்கான கிளியரன்ஸ் சான்று அளிக்கவில்லை. அதனால், படத்திற்கான சென்சார் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
அதேசமயம், கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு சென்சார் பணி முடிந்து யு/ஏ சான்றும் கிடைத்துவிட்டது. ஒருவேளை காலா திட்டமிட்ட தேதியில் ரிலீஸாகவில்லை என்றால் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் விஸ்வரூபம் 2 படத்திற்கான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கமல் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.