வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிக்கும் படம் பியார் பிரேமா காதல். இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்சன் ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். காதலை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. "high on love" என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் ஹிட்டாகின. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இதனிடையே இந்தப் படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க போட்டி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் ஹிந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.