ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இரண்டு கோடி இருந்தால் அழகாக ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விடுவார்கள். அதிலும் காமெடி நடிகர்கள் இடம்பெறும் படம் என்றால் பட்ஜெட் இன்னும் குறையத்தான் செய்யும்..
ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக தேசியவிருது பெற்ற காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாராமுடு நடிக்கும் 'குட்டன்பிள்ளயுடே சிவராத்திரி' படத்தில், கோவில் திருவிழா செட் ஒன்றை மட்டுமே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைத்து பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
இந்த திருவிழா காட்சிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கியுள்ளனராம். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வெகு யதாரத்தமாக வடிவமைத்துள்ளாராம் பிரபல ஸ்டன்ட் மாஸ்டரான ராஜசேகர் மாஸ்டர்.