வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பா.ரஞ்சித் டைரக்சனில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் 'காலா'. கபாலிக்கு எந்த அளவிற்கும் குறையாத வகையில் 'காலாவிலும் சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன என கூறியுள்ளார் ஆக்சன் இயக்குனர் திலீப் சுப்பராயன். படத்தில் கிட்டத்தட்ட 6 சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்திலுமே ரஜினி டூப் போடாமல் நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் திலீப் சுப்பராயன்.
அதுமட்டுமல்ல தீ எபெக்ட்டில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 6௦ டிகிரி வெப்பத்திலும் கூட நடிக்க ரஜினி தயக்கம் காட்டவில்லை என ஆச்சர்யப்படும் திலீப் சுப்பராயன், இத்தனை வயதிலும் கூட சண்டைக்காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது என சிலாகித்துள்ளார்.