ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் இரும்புத்திரை. விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார்.
மக்களின் தனிப்பட்ட தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் திருடி, அதை வைத்துக் கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைக்க நினைக்கும் பவர்புல் வில்லனை எதிர்த்து ஒரு ராணுவ வீரன் போராடுகிற கதை. பெரிய பட்ஜெட்டில் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.
தற்போது இந்தப் படத்தை கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் வாங்கி உள்ளார். ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. படத்தின் மார்க்கெட்டிங் அதிகாரியாக தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.