மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்த் திரையுலகத்தில் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், கார்த்திக், பிரபு, சரத்குமார் என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.
திருமணம் செய்து கொண்டு கணவர் குழந்தைகளுடன கனடாவில் செட்டிலானர். மீண்டும் திரும்பி வந்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகக் கலந்து கொண்டார். அப்போதே அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகின. ஆனால், அவர் நடிக்கவில்லை.
தற்போது குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ரம்பா முடிவெடுத்துள்ளாராம். முன்னாள் நாயகி என்றாலே அம்மா கதாபாத்திரங்கள்தான் தேடி வரும். ஆனால், ரம்பா அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பாரா எனத் தெரியவில்லை.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போஜ்புரி என பல மொழிகளில் நடித்தவர் ரம்பா. ஒரு மொழியில் இல்லை என்றாலும் வேறு மொழியில் எப்படியும் அவருக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைத்துவிடும்.