'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இந்த படத்தை தொடர்ந்து புஷ்கர் காயத்ரி அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதை சிவகார்த்திகேயன் தரப்பு மறுத்துவந்தது.
புஷ்கர் காயத்ரி அடுத்து இயக்கும் படம் குறித்து சமீத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. புஷ்கர் காயத்ரி அடுத்து 'விக்ரம் வேதா' படத்தை ஹிந்தியில் இயக்க இருக்கிறார்கள்.
தமிழில் விக்ரம் வேதாவை தயாரித்த சஷிகாந்தின் 'ஒய்நாட்' ஸ்டுடியோஸ், அனில் அம்பானியின் 'ரிலையன்ஸ்' நிறுவனம், நீரஜ் பாண்டேயின் 'சி.ஸ்டுடியோஸ்' ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து ஹிந்தி 'விக்ரம் வேதா'வை பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கின்றன.
ஹிந்தி 'விக்ரம் வேதா'வில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாதவன் நடிக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
ஹிந்தியில் மிகப்பெரிய நிறுவனங்கள் தயாரிப்பதால் படத்தின் பிசினஸை மனதில் வைத்து சம்பளம் சற்று அதிகம் கேட்டராம் மாதவன். அதற்கு தயாரிப்பு நிறுவனம் உடன்படாததால் மாதவன் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.