ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நட்சத்திர தம்பதியர் ராஜசேகர் - ஜீவிதாவின் வாரிசு ஷிவானி. டாக்டருக்கு படித்து வரும் இவருக்கும் சினிமா மீது மோகம் அதிகம். அதனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். தற்போது அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
தெலுங்கில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்தப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே தமிழில் மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார்.
மஞ்சப்பை, கடம்பன் படங்களின் இயக்குநர் ராகவன், அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதில், அதர்வா ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.
இதுதவிர, விஷ்ணு விஷால் நடிக்கும் கவரிமான் படத்திலும், இன்னும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.