விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி வசனத்தையே தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. அறிமுக இயக்குனர் அவினாஷ் ஹரிகரன் இயக்கி உள்ளார். ராஜதந்திரம் படத்தில் நடித்த வீரா, குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாட்லி புளூஸ் இசை அமைக்கிறார், சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆரா சினிமாஸ் சார்பில் காவ்யா மகேஷ் தயாரித்துள்ளார். இதன் படிப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. படம் பற்றி இயக்குனர் அவினாஷ் ஹரிகரன் கூறியதாவது:
ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் காவியா மகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் . அரசியல் சீரியசான விஷயம் என்றாலும் அதனை காமெடியாக கொடுக்கும்போது மக்கள் ரசிப்பார்கள். கசப்பு மருந்தை இணிப்பு கலந்து கொடுப்பது மாதிரிதான் இதுவும். என்கிறார் இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் .