ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் தமிழ் பேசத் தெரிந்த, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக இருக்கும் நடிகை அஞ்சலி. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் திரையுலகத்தில் அவருக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், திடீரென தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு பக்கம் தஞ்சம் அடைந்தார். அங்கு சில முக்கியமான படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்த 2018ம் ஆண்டில் அஞ்சலி நடிக்கும் நான்கு தமிழ்ப்படங்கள் வெளியாக உள்ளன. முதலில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கும் 'காளி' படம் வெளிவரலாம். அதற்கடுத்து ராம் இயக்கத்தில் நடித்துள்ள 'பேரன்பு' படமும், 'காண்பது பொய்' படமும் வெளியாகலாம். சசிகுமார் ஜோடியாக முதல் முறையாக நடிக்கும் 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழ்ப் படங்களில் இழந்த பெயரை மீண்டும் பெற வேண்டும் என உடற்பயிற்சி செய்து தன் எடையை நன்றாகக் குறைத்துள்ளார் அஞ்சலி. அவருடைய ஸ்லிம் ஆன புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார். தமிழில் மேலும் சில படங்களிலும் இந்த ஆண்டு அவர் நடிக்கவும் வாய்ப்புள்ளது.