நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தெலுங்கு திரையுலகத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை சாவித்ரி. அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் படமாக்கி வருகிறார்கள்.
இப்படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். இரண்டு மலையாள நட்சத்திரங்கள் தெலுங்கு நடிகையாகவும், தமிழ் நடிகராகவும் எப்படி பொருத்தமாக இருப்பார்கள் என முதலில் பலரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால், சமீபத்தில் 'நடிகையர் திலகம்' படத்தின் புகைப்படம் ஒன்று லீக் ஆகி உள்ளது.
அதில், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் இருவருமே அச்சு அசலாக சாவித்ரி, ஜெமினி கணேசன் போலவே உள்ளார்கள். மேக்கப் கலைஞர்கள் அந்த அளவிற்குப் பொருத்தமான தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஜெமினி கணேசன், சாவித்ரி பழைய புகைப்படம் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் சாவித்ரி அணிந்த செயின், வளையல், புடவை ஆகியவற்றையும் அப்படியே உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
லீக் ஆன புகைப்படத்தைப் பார்த்தவர்கள் இருவரும் பொருத்தமாக உள்ளார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.