'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யோகா டீச்சராக இருந்து நடிகையானவர் அனுஷ்கா. அவர் அவுட்டோர்களுக்கு செல்லும்போது யோகாவின் பயன்கள் குறித்து விளக்கி ஆர்யா உள்ளிட்ட சிலருக்கு படப்பிடிப்பு தளங்களிலேயே அவ்வப்போது யோகா பயிற்சியும் கொடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து யோகாவின் பலன்களை தெரிந்து கொண்ட பல நடிகைகளும் இப்போது யோகா செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவர்களில் தமன்னா குறிப்பிடத்தக்கவர். இவர் ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா இன்ஸ்டிடியூட்டில் உள்ள ருஹீ என்ற யோகா மாஸ்டரிடம் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.
இதுபற்றி தமன்னா கூறுகையில், நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் ஐதராபாத்திலுள்ள பாரத் தாகூர் யோகா இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்த பிறகு ரொம்பவே மாறி விட்டேன். அந்த இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி கொடுக்கும் ருஹீ மாஸ்டர் எனக்கு அவ்வப்போது முறையான யோகா பயிற்சி கொடுத்து என்னை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் உற்சாகமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்துள்ளார்.
மேலும், பாகுபலி படத்தில் நடித்து வந்தபோதுதான் அவரது நட்பு கிடைத்தது. அதிலிருந்து நான் யோகா பயிற்சி எடுத்து வருகிறேன் என்று கூறும் தமன்னா, நிஜமாலுமே யோகா பயிற்சி எடுத்த பிறகு நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இப்போதெல்லாம் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதை நான் தவற விடுவதில்லை என்கிறார் தமன்னா.