தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
'ட்ரீம் வாரியர்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியான படம் 'அருவி'. அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமாக காரணம் படத்தொகுப்பு.
இயக்குநருக்கு முதல்ப்படம் என்பதால் எக்கச்சக்கமாக ஷூட் பண்ணிவிட்டார். அதை மிகச்சரியாக எடிட் பண்ணி அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்தவர் எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிரஸ்டா. அருவி வெற்றிப் படமாக அமைந்ததோடு சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர் என்று பல்வேறு விருதுகளும் கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்த ரேமண்ட் டெரிக் கிரஸ்டாவுக்கு அறிமுக இயக்குனர் அபினேஷ் அப்புக்குட்டன் இயக்கும் 'ஜாலியன் வாலா பாக்' என்ற மலையாள படம் ஒன்றில் படத்தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு மருத்துவமனையின் பின்னணியில் நடக்கும் 'ஜாலியன் வாலா பாக்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
எடிட்டர் ரேமண்ட் டெரிக் கிரிஸ்டா படத்தொகுப்பு செய்யும் முதல் மலையாள படம் இது.