ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால், நடிகை மீனாவின் மகளான குழந்தை நட்சத்திரம் நைனிகா ஆகியோர் நடித்துள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீ-மேக் இது.
ஜன்னல் ஓரம் படத்தை தயாரித்த சுந்தரி பிலிம்ஸ் முருகன் தயாரித்த இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட்ட 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம், சிம்புவை வைத்து கெட்டவன் என்ற படத்தை தயாரித்தது. பின்னர் கெட்டவன் படம் ட்ராப் செய்யப்பட்டது.
அதன் பிறகு படம் தயாரிப்பதை மறந்திருந்த பரதன் பிலிம்ஸ் தானா சேரந்த கூட்டம், கொடி வீரன் படங்களை விநியோகம் செய்தது. அந்த படங்களைத் தொடர்ந்து தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை வெளியிடுகிறது.
'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பொங்கலுக்கு ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். தற்போது புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து அதை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த படத்தை இம்மாதம் 29-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.