பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. இந்தப்படத்திற்கும், கபாலி படத்திற்கு சில ஒப்பீடுகள் உள்ளன. அதனை பார்க்கலாம்.
கபாலியின் சாம்ராஜ்யம் மலேசியா, காலாவின் சாம்ராஜ்யம் தாராவி
கபாலிக்கு தாடியும் தலைமுடியும் சால்ட் அண்ட் பெப்பர். காலாவின் தலைமுடி கருப்பு, தாடி வெள்ளை
கபாலி கோட்சூட் அணிவார், காலா வேட்டி சட்டை அணிவார்
காபாலிக்கும் அன்பான குடும்பம் இருந்தது. காலாவுக்கும் அன்பான குடும்பம் இருக்கிறது.
கபாலியின் ஆயுதம் துப்பாக்கி, காலாவின் ஆயும் கத்தி.
கபாலியின் தீம் கலர் நீலம், காலாவின் தீம் கலர் கருப்பு.
கபாலிக்கும் உயிர் கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள், காலாவுக்கும் அதே மாதிரியான நண்பர்கள் இருக்கிறார்கள்.
"யார்டா அந்த கபாலி?" என்று கேட்டார் கிஷோர், "காலா என்ன பேர் இது?" என்று கேட்கிறார் நானா படேகர்.
கபாலியை மலேசிய தமிழர்கள் கொண்டாடி பாடினார்கள், காலவை தாராவி தமிழர்கள் கொண்டாடி பாடுகிறார்கள்.
"திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" கபாலியின் பன்ஞ் டயலாக். "ஒத்தையில நிக்கிறேன் மொத்தமா வாங்கலே" காலாவின் பன்ஞ் டயலாக்.
கடைசி குறிப்பு: கபாலிக்கும், காலாவுக்கும் மூத்த அண்ணன் நாயகன் வேலு நாயக்கர்.