அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள எதிர்நீச்சல், மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன் என பல படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். அவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன.
திரைக்குப்பின்னால் சிவகார்த்திகேயன் - அனிருத் இருவரும் நெருக்கமான நண்பர்களும் கூட. அந்த வகையில், இருவரும் ஒருவரையொருவர் டுவிட்டரில் அவ்வப்போது மனதார பாராட்டிக் கொண்டும் வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு நேற்று வெளியான ரஜினியின் காலா பட டீசர் பக்கா மாஸாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அந்த படத்தை தயாரித்துள்ள தனுஷ், இயக்குநர் ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.