ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் இணைந்து நடித்துள்ள படம் 'இரும்புத்திரை.' இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையில், 'இரும்புத்திரை' படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை ஷிபு தமீனின் 'தமீன் பிலிம்ஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான 'புலி' விக்ரம் நடிப்பில் 'இருமுகன்' ஆகிய படங்களைத் தயாரித்தவர் இவர்.
இப்போது ஹரி, இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி-2' படத்தை தயாரித்து வருகிறார். விஷாலின் 'இரும்புத்திரை'யை கேரளாவில் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஷிபு தமீன்!
ஆனால் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. என்றாலும் மார்ச் 29 ஆ தேதியை மனதில் கொண்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.