'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய அளவில் பிரமிக்க வைத்த படம் ராஜமவுலின் பாகுபலி மற்றும் பாகுபலி 2. இவற்றில் பாகுபலி 2, ஆயிரம் கோடி வசூலை கடந்த முதல் இந்தியப்படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது இந்தப்படத்திற்கு மேலும் ஒரு பெருமை கிடைத்திருக்கிறது.
பாகுபலி 2 படத்தில் இடம்பெற்ற சாகோரே பாகுபலி வீடியோ பாடலை 10 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதன்மூலம் தென்னிந்தியாவில் ஒரு படத்தில் இடம்பெற்ற வீடியோ பாடலை 10 கோடி பேர் பார்த்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதை லகரி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதேப்போன்று தெலுங்கு பிடா படத்தில் இடம்பெற்ற வச்சீண்டே மெல்லகா வக்கீந்தே என்ற பாடலையும் 100 மில்லியன் பேர் பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தனுஷ் - ஸ்ருதி நடிப்பில், அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலை 14 கோடி பேர் பார்த்து ரசித்து, அதிபெரும் சாதனையை படைத்திருக்கிறது.
பட பாடலாக எடுத்து கொண்டால் பாகுபலி 2 தான் முதலிடம் பிடிக்கிறது. அதேசமயம், ஆல்பம் என பொதுவாக எடுத்து கொண்டால் ஒய் திஸ் கொலவெறி தான் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.