‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இணைய தளங்களைப் பொறுத்தவரையில் அஜித், விஜய் ஆகியோருக்கிடையேதான் மிகப் பெரும் போட்டி என்பதை 'காலா' படத்தின் டீசர் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அஜித், விஜய் ஆகியோரது படங்களின் டீசர் யு டியுபில் வெளியானால் குறைந்த மணி நேரத்தில் பல சாதனைகளைப் படைக்கும்.
ஆனால், நள்ளிரவில் வெளியான 'காலா' டீசர் 'மெர்சல்' டீசரின் சாதனையை முறியடிக்காமல் பின்தங்கிவிட்டது. எந்த விதமான அறிவிப்பும் இன்றி திட்டமிட்ட மணிக்கு முன்பாகவே நள்ளிரவில் வெளியானதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
'மெர்சல்' டீசர் 24 மணி நேரத்தில் 1 கோடியே 12 லட்சம் பார்வைகள், 7 லட்சத்து 28 ஆயிரம் லைக்குகள், 52 ஆயிரம் கமெண்ட்டுகள், 1 லட்சத்து 59 ஆயிரம் டிஸ்-லைக்குகள் ஆகியவற்றைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் சுமார் மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே 6 லட்சம் லைக்குகளைக் கடந்து தனிப் பெரும் உலக சாதனையைப் படைத்தது.
'காலா' டீசர் வெளிவந்தால் அந்த சாதனையை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வருத்தமாகிவிட்டது.
கடந்த 12 மணி நேரத்தில் 'காலா' டீசர் 35 லட்சம் பார்வைகளையும், 2,44,000 லைக்குகளையும், 12,124 கமெண்ட்டுகளையும், 28,000 டிஸ்-லைக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது.
இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 'மெர்சல்' டீசர் அதன் சாதனையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.