அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் யூ டியுபில் வெளியான டீசர் வரலாற்றில் ரஜினிகாந்த் நடித்த கபாலி டீசர்தான் முதன் முதலில் மிகப் பெரும் சாதனை படைத்தது. அதன் பிறகு தெறி, விவேகம், மெர்சல் ஆகிய படங்களின் டீசர் கபாலி சாதனையை மிஞ்சும் அளவிற்கு தனித் தனி சாதனைகளைப் படைத்தன.
தற்போதைக்கு தமிழ்ப் படங்களின் டீசர்களில் மெர்சல் டீசர்தான் தனிப் பெரும் சாதனை படைத்த டீசராக இருக்கிறது. குறைந்த மணி நேரத்தில் அதிக லைக்குகள், பார்வைகள், அதிகம் பார்வை பெற்ற டீசர் என இந்தியத் திரையுலகத்திலேயே முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மெர்சல் டீசரின் சாதனையை இன்னும் இரு தினங்களில் வெளியாக உள்ள காலா டீசர் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.
மெர்சல் சாதனையை 2.0 டீசர் வந்தால்தான் முறியடிக்க முடியும் என பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால், 2.0 வெளிவர தாமதம் ஆவதால் காலா டீசர் முன்னரே வருகிறது. எதிர்பார்ப்புகளை மீறி காலா டீசர் மெர்சல் சாதனையை முறியடிக்குமா என்பதை விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.