Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஸ்ரீதேவி காலமானார் : திரையுலகினர் அதிர்ச்சி

25 பிப், 2018 - 03:23 IST
எழுத்தின் அளவு:
actress-sri-devi-demise

தமிழகத்தில் பிறந்து இந்திய சினிமாவையே வியக்க வைத்த நடிகை ஸ்ரீதேவி (54), துபாயில், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். திருமண நிகழ்வுக்காக துபாய் சென்றிருந்த போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்த போது அவரின் கணவர் மற்றும் இளைய மகள் குஷி உடனிருந்தனர். மூத்த மகள் ஜான்வி மும்பையில் தன் முதல் படமான தடாக் படப்பிடிப்பு இருந்ததால் துபாய் செல்லவில்லை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீதேவி, 1963-ம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் ஐயப்பன் - ராஜேஸ்வரி. ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அம்மா யாங்கர் அய்யப்பன்.

4 வயதில்...
4 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர் ஸ்ரீதேவி. எம்.ஏ.திருமுருகன் இயக்கிய துணைவன் என்ற படத்தில் முருக கடவுளாக நடித்தார். தொடர்ந்து நம்நாடு கனிமுத்து பாப்பா வசந்த மாளிகை, பாரத விலாஸ் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

13 வயதில் ஹீரோயின்
பின்னர் தனது 13வது வயதில் கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இந்தப்படத்தில் ரஜினியும், கமலும் நடித்திருந்தனர். அப்போது துவங்கிய ஸ்ரீதேவியின் ஹீரோயின் பயணம் கவிக்குயில், 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், ப்ரியா, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை... என ஏராளமான வெற்றி படங்களில் நடித்தார்.

கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. அதன்பின் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக ஆலிங்கனம் குட்டவும் சிக்ஷையும் ஆத்ய பாடம், ஆ நிமிஷம் போன்ற திரைப்படங்களை கூறலாம்.

தென்னிந்திய சினிமாவின் குயின்
தமிழ் மட்டுமல்லாது 70-80 களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக திகழ்ந்து குயினாக வலம் வந்தார்.

பாலிவுட்டையும் கலக்கிய ஸ்ரீதேவி
1975 ஆம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளி வந்த ஜுலி என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன் (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதா நாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட மூன்றாம் பிறை திரைப்படம் ஹிந்தியில் சத்மா என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

ஜிஜேந்திராவுடன் ஹிம்மாத்வாலா என்ற படத்தில் நடித்தார். இது பிளாக் பஸ்டர் படமாக அமைய, தொடர்ந்து பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக மாறினார். தொடர்ந்து சாத்மா(மூன்றாம் பிறை ரீ-மேக்), நாகினா, கர்மா, மிஸ்டர் இந்தியா, சால் பாஸ், சாந்தினி, லாம் கி உள்ளிட்ட ஏரளான வெற்றி படங்களில் நடித்தார்.

திருமணம்
ஹிந்தி படங்களில் நடித்த போது நடிகர் மிதுன் சக்கரபோர்த்தியை காதலித்தார். தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணமானவர். ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். கடைசியாக கடந்தாண்டு வெளிவந்த மாம் படத்தில் முதன்மை ரோலில் நடித்தார். இந்தப்படம் பெரியளவில் பாராட்டை பெற்றது.

இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

கோலிவுட் - பாலிவுட் டாப் நடிகர்கள்
நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார், ஜெய்சங்கர் போன்றவர்களுடன், தெலுங்கில் என்டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், சோமன் பாபு, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உடனும், கன்னடத்தில் ராஜ்குமார், அம்ரீஷ் ஆகியோருடனும், ஹிந்தியில் ராஜேஷ் கண்ணா, ரிஷி கபூர், அமிதாப் பச்சன், ஜிஜேந்திரா, அனில் கபூர் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஜொலித்துள்ளார்.

விருதுகள்
ஸ்ரீதேவியின் கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

1977 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் சிறப்பு விருது 16 வயதினிலே திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது தமிழில் மீண்டும் கோகிலா திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது சால்பாஸ் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது க்ஷன க்ஷனம் என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது லம்ஹே திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

இதுதவிர ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் ஸ்ரீதேவி.

50 ஆண்டை நிறைவு செய்த ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இந்தியா சினிமாவின் வியக்கத்தக்க நடிகையாகவும், குயினாகவும் வலம் வந்தார். அந்தவகையில் இவர் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை என்ற பெயரையும் பெற்றுள்ளார்.


ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். துபாயிலிருந்து ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. இன்றோ அல்லது நாளையோ அவரது உடல் மும்பை வரும் என தெரிகிறது. மும்பையில் இறுதிசடங்குகள் நடக்கின்றன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in