'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெளிவந்த பிறகு அனுஷ்கா மீதான இமேஜ் மாறிவிட்டது. மேலும் சமீபத்தில் வெளிவந்த 'பாகமதி' படமும் தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களே தோல்வியைத் தழுவிய நிலையில் அனுஷ்கா நடித்த 'பாகமதி' ஹிட்டாகி ஆச்சரியத்தைக் கொடுத்தது.
'பாகமதி' படம் வெளிவந்த பின்னும் அனுஷ்கா இன்னும் அடுத்த படத்தில் நடிக்க எந்த ஒப்பந்தத்தையும் போடவில்லை. அவர் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'பாகுபலி, பாகமதி' ஆகிய படங்கள் அனுஷ்காவிற்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனால், தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதா அல்லது வழக்கமான படங்களில் நடிப்பதா என முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறாராம். இனி மேலும், வழக்கமான கிளாமர் ஹீரோயினாக நடிப்பது அவருக்குப் பொருத்தமாக இருக்காது என நினைக்கிறாராம்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுடன் வரும் இயக்குனர்கள் குறைவாக இருப்பதும் அதற்கும் ஒரு காரணம். அனுஷ்கா, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க எப்போதே சம்மதித்துள்ளார். ஆனால், இருக்கும் படங்களையே முடிக்க முடியாமல் தவித்து வரும் கௌதம் மேனன் அந்தப் படத்தை எப்போது ஆரம்பிப்பார் என்றே தெரியாது.
இதனால், அனுஷ்காவை இனி குறைவான படங்களில்தான் பார்க்க முடியும்.