பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவருக்கும் காதல் என கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தபடி உள்ளன. இதை ஸ்ருதி அறிவிக்கவில்லை என்றாலும், காதலரை, அவருடைய அம்மா சரிகா, அப்பா கமல்ஹாசன் ஆகியோருக்கும் சில மாதங்கள் முன் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னையில் நடந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமணத்திலும் காதலைரை பட்டு சட்டை வேட்டி அணிய வைத்து அப்பா கமல்ஹாசனுடன் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
மைக்கேல் கோர்சேலுக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். அவரைக் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு ஒரு அற்புதமான பிறந்த நாள் வாழ்த்தை சொல்லியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். “என் நெருங்கிய நண்பர், குற்றங்களில் உடன் இருப்பவர், விசித்திரமான உரையாடல்களில் உன்னதமானவர், கலை உலகில் உடன் பயணிப்பவர், எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய எல்லாவற்றிற்கும் கூடவே சிரிப்பவர், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்,” என அசத்தலான டுவீட்டைப் பதிவு செய்துள்ளார்.
அதேசமயம், பிறந்த நாளில் தான் மைக்கேலுடன் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நண்பருக்கு மட்டுமா இப்படி வாழ்த்து சொல்ல முடியும் ?.