பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலா இயக்கத்தில் ஜோதிகா அதிரடி போலீசாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் நாச்சியர். இந்த படத்தின் டிரெய்லரில் ஜோதிகா பேசியிருந்த ஆபாச டயலாக்கினால் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அந்த டயலாக்கே படத்திற்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாச்சியார் படம் திரைக்கு வந்தது. ஆனால், டிரெய்லரில் பேசியிருந்த ஆபாச டயலாக்கை மியூட் பண்ணியிருந்தார்கள். மேலும், அதிரடி போலீசாக அசத்தலாக நடித்திருந்தார் ஜோதிகா. இதனால் நாச்சியார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், நாச்சியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மட்டும் ரூ. 32 லட்சம் வசூலித்துள்ளது. அதேபோல் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலுமே படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக நாச்சியார் பட வட்டாரம் தெரிவிக்கிறது.