ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உள்குத்து படத்திற்கு பிறகு வணங்காமுடி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நடித்துள்ளார் அட்டகத்தி நந்திதா. இந்த படங்களில் நெஞ்சம் மறப்பதில்லை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வணங்காமுடி பைனான்ஸ் பிரச்னையில் கிடப்பில் கிடக்கிறது. அதனால் அடுத்தபடியாக தமிழில் புதிய படங்கள் இல்லாத நந்திதா, தெலுங்கில் தீவிர முயற்சி எடுத்து தற்போது நிதின் நடிக்கும் ஸ்ரீனிவாசா கல்யாணம் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்த படத்தில் முதலில் பூஜா ஹெக்டே தான் நாயகியாக கமிட்டாகியிருந்தார். ஆனால், அவர் வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் நடிப்பதால், கால்சீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். இதனால் அந்த வாய்ப்பு நந்திதாவிற்கு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு நிதினுக்கு ஜோடியாக எக்கடிக்கி பொத்தவு சின்னவாடா என்ற படத்திலும் நந்திதா ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.