மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழில் டப்பிங் ஆகி கடந்த மாதம் 26ம் தேதி வெளியான படம் 'பாகமதி'. அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு தமிழில் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால், தெலுங்கு ரசிகர்களிடத்தில் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் எந்த ஹீரோக்களின் துணையும் இல்லாமல் அனுஷ்கா அவருக்கென தனி வியாபாரத்தையும், வசூலையும் பெற்று திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கடந்த பத்து நாட்களில் இப்படம் சுமார் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த பவன் கல்யாண், பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்த படங்கள் நஷ்டத்தைத் தந்த சூழ்நிலையில் அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' லாபகரமாக அமைந்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் சுமார் 30 கோடி வரையிலும், தமிழ்நாட்டில் 10 கோடி ரூபாயும், அமெரிக்கா, கேரளாவில் தலா 6 கோடி ரூபாயும், மற்ற வசூலையும் சேர்த்து சுமார் 60 கோடியை இந்தப் படம் நெருங்கிவிட்டது என்கிறார்கள்.
'பாகமதி' படம் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் அனுஷ்கா அடுத்து தமிழ், தெலுங்கில் இன்னும் எந்தப் புதுப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.