ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். அவருடன் கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார், ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். 7ஜி எண்டர்டெயின்மெண்ட், அம்மா நாராயணா புரொடக்ஷன் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து மற்றும் இயக்குனர் ஆறுமுககுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
விஜய் சேதுபதி 10க்கும் மேற்பட்ட கெட்அப்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. விஜய் சேதுபதி படங்களிலேயே இதுதான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முதன் முறையாக விஜய் சேதுபதி படம் நாளை மறுநாள் (2ந் தேதி) தமிழ் நாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து படத்தை வாங்கி வெளியிடும் கிளாப் போர்ட் புரொடக்ஷ்ன் வி.சத்யமூர்த்தி கூறியதாவது: இது வரை நான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை பார்க்கவில்லை. விஜய் சேதுபதி மீது முழு நம்பிக்கை இருக்கிறது.விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக்கின் இந்த புதிய கூட்டணி எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும். படத்தை 400 தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்திருக்கிறோம் என்கிறார் விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி.