பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படங்கள் ஒரு பக்கம் தியேட்டரில் வசூலைக் குவிக்கின்றன. இன்னொரு பக்கம் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் குவிக்கின்றன. அருவி படம் விருதுகளை அள்ளியதுபோல், மாநகரம் படமும் திரைப்பட விழாக்களில் பாராட்டை அள்ளி வருகிறது.
நெதர்லாந்தில் பிப்ரவரி மாதம் International Film Festival Rotterdam (IFFR) என்ற திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடப்படுவதற்காக எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பில், லோகெஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தில் சந்தீப்கிஷன், ஸ்ரீ, சார்லி, ரெஜினா கெசண்ட்ரா முதலானோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கடந்த வருடம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப்பெற்றது. வணிகரீதியிலும் ஓரளவு வசூலைக் குவித்தது. மாநகரம் படம் தவிர ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள 'பேரன்பு' திரைப்படமும் அந்த திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
'பேரன்பு படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.