ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் நாட்டில் பாபுகணேஷ் என்ற இயக்குனர் சினிமாவில் 27 துறைகளை கையாண்டு கின்னஸ் சாதனை படைத்ததாக கூறுவார். தற்போது சக்தி ஸ்காட் என்பவர் ஜெயிக்கப்போவது யாரு என்ற படத்தில் அவர் ஒருவரே 29 துறைகளை கையாண்டிருக்கிறார். தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
இது ஒரு கார் கடத்தல் தொடர்பான படம். இதில் இயக்குனர் சக்தி ஸ்காட்டே ஹீரோவாக நடிக்கிறார், வந்தனா ஹீரோயின். பவர் ஸ்டார் சீனிவாசன் வில்லனாக நடித்துள்ளார். இது குறித்து சக்தி ஸ்காட் கூறியதாவது:
கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினிமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.