தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத் திரையுலகிலிருந்து, தமிழுக்கு வந்துள்ள புதிய வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் சுற்றுலா தலமான, குமரகோமில் பிறந்த நமிதா, இதுவரை, மலையாளத்தில், 16 படங்களில் நடித்து முடித்துள்ளார். புதிய தீரங்கள் படத்தில் நடித்ததன் மூலம், ஏராளமான விருதுகளை குவித்துள்ள அவர், தற்போது, நிமிர் படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகமாகிறார்; அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்!
மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, அதன் மூலம், திரைப்படத் துறைக்கு வந்தேன். நிவின் பாலி உட்பட, மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டேன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே, தமிழில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்தது. ஆனால், மலையாள படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால், தமிழில் நடிக்க முடியவில்லை. இப்போது தான், அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
நிமிர் படம் பற்றி...
மலர் என்ற, சாதாரண குடும்பத்து பெண்ணாக நடிக்கிறேன். தைரியமான கேரக்டர். கல்லுாரி மாணவியாக வருகிறேன். மேக் அப் அதிகம் இல்லாமல் நடித்துள்ளேன்.
தமிழ் சினிமாவில் நடித்த அனுபவம்?
இயக்குனர் ப்ரியதர்ஷன் கேரளாவைச் சேர்ந்தவர். அவரது உதவி இயக்குனர்கள் பலரும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான். அதனால், நடிப்பதற்கு சுலபமாக இருந்தது. மலையாளத்துக்கும், தமிழுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனாலும், தமிழில் சரளமாக பேசத் தெரியும்.
உங்கள் ஆசை என்ன?
தமிழில் அதிக படங்களில் நடிக்க வேண்டும். நல்ல கதை, கேரக்டர் கிடைக்க வேண்டும். தமிழில், எனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது.
நடித்ததில் பிடித்தது?
டிராபிக் பட அனுபவத்தை மறக்க முடியாதது. அதுபோல், விக்ரமாதித்யன், புதிய தீரங்கள் படங்களும் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
படிப்பு?
சோஷியாலஜி படிக்கிறேன். நடிப்பு, படிப்பு, இரண்டிலும் சமர்த்து பெண் நான். இரண்டையுமே விட்டு விடாமல் தொடர்கிறேன்.
பிடித்த நடிகை?
ஜோதிகாவை ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அவங்க காட்டும் ரியாக் ஷன் எல்லாம், சான்சே இல்லை.
படத்தின் ஹீரோ உதயநிதி பற்றி?
ரொம்ப அமைதியானவர். இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் பயந்து பயந்து பேசுவார். மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசும், அவரது குணம் எனக்கு பிடிக்கும்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பீர்களா?