ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சத்யம் சினிமாவின் மூவிபஃப் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. இதில் வெற்றி பெற்ற ஆனந்த் என்பவர் தற்போது திரைப்படம் இயக்கி கொண்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குறும்பட இயக்குனர்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த ஆண்டும் அதேபோன்ற குறும்பட போட்டி நடக்கிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர்கள் ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு போட்டி குறித்து கியூப் சினிமா டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி அரவிந்த் கூறியதாவது:
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம். உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கதையை குறும்படமாக்கலாம். தங்களுடைய வாழ்க்கையை நடைபெற்ற அனுபவத்தை வைத்து ரசிகர்களை பரவசமடையச்செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
இதற்கு எங்களுடன் நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறது. இந்த குறும்படங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை அளிக்க நாக் ஸ்டுடியோஸ் முன்வந்திருப்பதையும் நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
மூன்று நிமிட கால அளவிற்குள் குறம்படத்தை அனுப்பவேண்டும். போட்டியில் முதலிடத்திற்கு தேர்ந்தெடுப்பவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாயும், இரண்டாமிடத்தை வென்றவருக்கு இரண்டு லட்ச ரூபாயும், மூன்றாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும். முதலிடத்தை வென்ற போட்டியாளருக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தங்களின் கதை மற்றும் திரைக்கதையை கூற வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும்.' என்றார்.