ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிட்டத்த ரீமேக் படங்களில் நடித்து உதயநிதி ருசிகண்டு விட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.. இந்தி ரீமேக்கான 'மனிதன்' படத்தை தொடர்ந்து தற்போது மலையாள படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' ரீமேக்காக 'நிமிர்' என்கிற படத்தில் பிரியதர்ஷன் டைரக்சனில் நடித்துள்ளார் உதயநிதி. வரும் ஜன-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'ஹேப்பி வெட்டிங்' என்கிற படத்தின் ரீமேக்கிலும் உதயநிதி நடிக்க இருக்கிறார். அந்தப்படத்தை இயக்கிய ஓமர் லுலுவே தமிழிலும் அதை இயக்கவுள்ளாராம். சமீபத்தில் தானும் உதயநிதியும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ஓமர் லுலு.
கடந்த 2016ல் மலையாள சினிமாவின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து, அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஓமர் லுலு